Tuesday, June 20, 2017

வெசாக் - பௌத்தர்களின் கொண்டாட்டம் #srilanka

வெசாக் - பௌத்தர்களின் கொண்டாட்டம் 


வெசாக் பௌத்தர்களின்  மிக முக்கிய  நாள் ஆகும் . இலங்கையில் May மாதம் வருகிற பௌர்ணமி அன்று வெசாக் நாளாக கொண்டாட படுகிறது . (தமிழ் முறையில் பார்த்தால் வைகாசி விசாகம் அன்றே புத்தர் பிறந்த  தினமாக சொல்ல படுகின்றது. So , June மாதம் வருகின்ற பௌர்ணமி அன்றல்லவா கொண்டாட பட வேண்டும்? -doubt-u 😕  ) Anyway , அந்த நாள் மிக முக்கியமான நாளாக பௌத்தர்களிடையே இருப்பதற்கான  காரணம் மூன்று .
1> புத்தர் பிறந்த நாளும் அன்றே .
2> புத்தர் ஞானம் பெற்ற நாளும் அன்றே .
3> புத்தர் மறைந்த நாளும் அன்றே.

பக்தியுடன் கொண்டாட படும் இந்த நாளை அவர்கள் தொடங்குவது அவர்களின் ஆலயமான 'பன்சல் ' ஆகும் . ஆண் , பெண் , சிறுவர்கள் , பெரியவர்கள்  அனைவரும் வெள்ளை உடை அணிந்து பன்சல்  சென்று , மதகுரு சொற்பொழிவுகளை செவிமடுத்தவண்ணம் பகல் பொழுது முழுவதையும் கழிப்பார்கள். பின் வீடு வந்து விளக்குகள் ஏற்றி 'வெசாக் கூடு ' என்கிறன்ற அலங்காரங்களை தொங்க விடுவார்கள். அன்றைய நாளில் பல பந்தல்கள் அமைத்து இலவசமாக உணவு குளிர்பானம் தேநீர் பிஸ்கட் என அவர் அவர்களால் முடிந்ததை கொடுப்பர். நகரம் பூராகவும் புத்தரின் வாழ்க்கை சம்பவங்களை கூறும் நோக்கத்துடன் 'வெசாக் தோரான்' எனப்படும் பந்தல்கள் இசை நிகழ்ச்சிகள் நடை பெரும். இலங்கையில் தொடர்ந்து மூன்று இரவுகள் இவை அனைத்தும் நடைபெறும்.

மிக கோலாகலமாக கொண்டாடப் படுகிற இந்த நாளுக்காக நானும் எனது இரு தோழியர்களும் வருடம் பூராகவும் காத்துகொண்டு இருப்போம். இந்த நாளில் மட்டும் நாங்கள் இரவில் செல்ல தடை கிடையது வீடுகளில். நண்பிகளுடன் பொழுதை கழிப்பதற்கு யாருக்கு தான் ஆசை இல்லை?
அதுவும் இரவு நேரங்களில் , பாரதி கண்ட புதுமை பெண்ணாய் 😎  . அந்த பதிவை video ஆக உங்கள் முன் இதோ .......


Popular Posts