Wednesday, November 27, 2013


காதல் தோல்வி - பெண்ணிற்கும் உண்டு . . .!


இவள் ஆறுதல் தேடியதில்லை 

மதுவிலோ போதையிலோ . . . !
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை

மாப்ள-மச்சான் நண்பர்களிடத்தில் . . . !
இவள் சோகத்தை மறந்ததில்லை 

கானா மெட்டுக்கள் பாடி . . . !
இவள் பழி சுமத்தியதில்லை 

ஒட்டுமொத்த ஆண்கள் வர்க்கமே மோசமென்று . . . !
இவள் கவனிக்கத் தவறியதில்லை 

கேட்கக் கூசும் விமர்சனங்களை . . . !
இவளுக்கு தெரிந்தது, முடிந்தது, அனுமதிக்கப்பட்டது

எல்லாம் வெறும்
“தலையணை நனைத்தலும்' 
"யாருக்கும் தெரியாமல் தன்னை வருத்துவது'' மட்டுமே . . . ! ! !

Popular Posts