Monday, May 14, 2012

உலகமே அன்னையரை போற்றிக்கொண்டு இருக்கும் இந்த மாதத்தில் , என் blog இலும் என் தாய் / தாய்மார்கள் பற்றி சிறிய பதிவு !


எனோட வாழ்க்கை-ல அம்மா-ங்கற கதாபத்திரம் ரொம்பவே முக்கியமானது (எல்லாருக்குமே அப்டி தான் ஆனாலும் நர்மி-கு இன்னும் special )
என்-ன்னு சொல்லுறேன் நீங்களே தெரிஞ்சுகோங்க ...

என் அம்மாமா - என்  முதல் தாய்
.நான் பிறந்தது என் தாய் வயிற்றில் என்றாலும் வளர்ந்தது என் தாயிற்கும் தாய்-யான எனோட அம்மாமா -வுடன்
எனக்கும் தாய் என் அம்மாவிற்கும் தாய் .. (இந்த விடயத்தில நான் ரொம்பவே குடுத்து வச்சவ ன்னு தான் சொல்லணும் ) 
நல்லது, கேட்டது, இன்னது இப்படி ,இன்னது அப்படி ன்னு  .... மேலும் தேவரத்தில இருந்து திருவாசகம் வரையிலும் ... ஆத்திசூடி ல இருந்து   திருக்குறள்  போன்ற ..
அவங்களுக்கு தெரிஞ்ச எல்லாமே சொல்லி குடுத்து இருகாங்க .... மாலை 6 மணிக்கு மேல மூணு பெரும் அம்மாமா சொல்லி கொடுத்த-வற்றில் எங்களுக்கு நினைவு
இருக்கிற எல்லாத்தையுமே மூன்று பெரும் போட்டி போட்டு கொண்டு அம்மா , அம்மம்மா முன்னாடி எல்லாத்தையும் ஒப்புவிப்போம் ...
பாராட்டும் வாங்குவோம் !! (சிலநேரம் பரிசுகளும் உண்டு ;) )எனோட 12 வயசு வரைக்கும் நான் வாழ்ந்தது முற்றிலும் ஒரு அரண்மனை-னே
சொல்லணும் :)  . பொருள் , பண்ட ஆடம்பரத்தில்  இல்லைனாலும் எனோட அம்மாவோட & அம்மமாவோட பாசத்துல நானும் என் அண்ணன்களும் மூழ்கி போய் இருந்தோம் ...
2005 எங்களுக்கு பெரும் அதிர்ச்சி .... எனோட அம்மமாவோட பிரிவு ... எங்க நாலு பேருக்கும் தனிமை :( .. ஒரு மூன்று மாதம் எப்டி போனதுனே  தெரியாது.... 


என் ராணிமா - எங்கள் உயிர்
எனோட வாழ்க்கைல கிடைச்ச மிகப்....பெ..ரி...ய...... (என்னனு சொல்லலாம் ?? ) valuable precious Supppppperrrbbb GIFT  :)
சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லைங்க ..... அவ்வளவு powerful -lady  எனோட அம்மா....  (இல்லாமய பின்ன? எனோட அம்மமாவோட வளர்ப்பு ஆச்சே )
அவங்களோட நிதானம் ,அவங்களோட பக்குவம் ,அவங்களோட thinkings  யாருக்குங்க வரும் ?? (கண்டிப்பா எனக்கு எட்டா கனி தான் )
அடடா மறந்துட்டேனே எனோட அம்மாவோட அழகு??? என்கிட்ட வந்து யார் ரொம்ப அழகுன்னு கேட்டா .... என் பதில்  "அம்மா " :) மட்டும் தான் .
(அம்மான்னா  எனோட அம்மா மட்டும் இல்ல எல்லா அம்மாவுமே தான்  )  எனோட best friend ... எனோட லவர்..  எனோட enemy .. எனோட team -mate  ..
எனோட teacher ..  இப்படி எல்லாமே அவங்க தான் எனோட ராணி அம்மா :) ....... எனக்கு மட்டும் இல்லாம எனோட school time - classmates கும் ரொம்ப
புடிச்ச அம்மாவா இருந்து இருகாங்க ... !! இன்னொன்னு கண்டிப்பா சொல்லணும்க  எனோட அம்மா எனக்கு அம்மா மட்டும் இல்ல ஒரு குழந்தையும் கூட  :) .
ஒரு சின்ன விபத்துல அம்மா மருத்துவ நிலையத்துல  ஒரு மாதம் இருந்தப்போ அம்மாவ கவனிசிக வேண்டிய பொறுப்பு (பாக்கியம் )
எங்க மூணுபேருக்கும் கிடைச்சது.. மூன்று கிழமை படுக்கையிலேயே இருந்த அவங்க முதல் அடி எடுத்து வச்சி நடந்தப்போ ஏற்பட்ட சந்தோசம் இருக்கே .....
பிறந்த குழந்தை முதல் அடி எடுத்து வச்சா  போல .....  அன்னில இருந்து அவங்க எங்க குழந்தையும் கூட  ..... (இன்று வரை ... இனிமேலும் ) .
copyrights@n@rmiPhotography


எனோட அண்ணன்க - அவங்களும் எனக்கு ஓர் தாய்
ரொம்ப சொல்லுறதுக்கு விரும்பலைங்க ......... ஒவ்வொரு அண்ணனும் எனக்கு ஓர் தாய் தான் :)
எனோட suppperrb  பிரசாத் அண்ணா  ... cute பிரதீப் அண்ணா ... grate சிவா அண்ணா .. wonderful அருண் அண்ணா .. lovely கார்த்திக் அண்ணா ...very calm குரு அண்ணா இவங்க தாங்க ... பாசத்துல அண்ணனுக்கு அண்ணனுமாய் தாய் கு தாயுமாய் இருக்றவங்க

எனோட மலிகா அம்மா .. மேகலா அம்மா ... சந்திரா அம்மா ...
இந்த தாய் பாசம் கிடைக்கிறதுக்கு ரொம்ப குடுத்து வச்சி இருக்கேன் ன்னு தான் சொல்லணும் (என்ன தவம் செய்தனை .... யசோதா  :D )
இவங்களோட நான் உறவாடுவது phone  - ல தாங்க :-/  (அது தான் ஒரு குறை )
மட்டற்ற படி ... இவங்களோட பெற மகளா இருக்கிறது சந்தோசதிளையும் சந்தோசம் தான்-க !! ராணிமா.. மல்லிமா.. மேகலாமா ..சந்திராமா..
 ஒருத்தருக்கு ஒருத்தர எடைபோடவே முடியாது பாசம் ங்கற  தரசு தட்டுல ......ஒவ்வொரு முறையும் அவங்களுக்கு phone பண்ணதும்
 "ஆ சொல்லுப்ப எப்டி இருக்க ன்னு "கேட்கும் பொது கிடைகிற சந்தோசம் தனி தாங்க :) ஒவ்வொருத்தரும் அனுபவிக்க வேண்டிய ஒரு சந்தோசம் ....
வேண்டிகொள்கிறேன் இறைவனை ... மத்தவங்களுக்கும் கிடைக்கணும் ....இது போன்ற பாச மழைல நனைகிற வைப்பு கிடைக்க வேண்டும் என்று ....

இப்போ தெரியுதாங்க எனோட வாழ்க்கைல  அம்மா-கள் கதாபத்திரம்  பற்றி 


வாழ்த்து சொல்ல வயது இல்லை என்றாலும் ...
நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன் .... உங்க அனைவருக்கும் :)
நீங்க இல்லேன்னா சந்தோசத தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டு  இருக்கும் இந்த நர்மி-கு  ...

வாழ்க்கைல ரொம்ப முக்கியமான .. பாசம் அன்பு சந்தோசம் இப்டி  எல்லாத்தையுமே கொடுத்த உங்களுக்கு
இந்த நர்மி யோட மிகப் பெரிய நன்றி :)


luvvvvvvvv uuuuu alllll muchhhh and mooooosttttttt 


No comments:

Post a Comment

Popular Posts