Thursday, April 26, 2012





copyrights@n@rmiPhotography

நண்பனிற்கும்  - நண்பிக்கும்

இடையிலான

✔ ✔ நட்பு ✔ ✔



மகிழ்கிறது மனம் நண்பனின்
"கவிதை blog" இல் எனக்கே
எனக்கென இன்று - ஓர்
 கவிதையை கண்டதும்.

ஆனால் எச்சரிக்கை !
பிறந்த கவிதை  நம் நட்பின்
 பெருமையை பறை சாற்றுவதாக இல்லை.

நம் நட்பிற்கும் எல்லை உண்டோ
என  வினவும் வேளையில்
இனி(மேல்) ஒரு நட்பில்லை
என்றுக்  கூறி சென்று விட்டான்.

நாம் போட்ட சண்டைகளில்
பெரிய சண்டையான - இந்த
நீண்ட நாள் இடைவெளி
நம் நட்பையே இழந்து (இறந்து)
விட்டதாக எண்ண வைத்தது போலும்.

என் முதற் கவிதை பிறக்க
காரணமாய் இருந்த அந்தத்
தாய் கவிதைகளை எங்கனம்
பிடிக்காமற் போகும் ??

பற்பல தடைகளிலும்
விட்டுபோகாமல் இத்தனை
 காலமாய் பயணிக்கும்
அவனுடனான நட்பு எங்கனம்
பிடிக்காமற் போகும் ??

எல்லா வேலைகளிலும் நண்பியாய்
இருக்க விரும்பியவள்
ஓரிரு இடங்களில் தவறியதால்
"நண்பி" என்ற பட்டத்தை
இழந்துவிடலாமா ?? (குமோ )??

ஒரு முனை
தவிக்கிறது நட்பு
நட்பாலும் எனை புரிந்து கொள்ள
முடியவில்லையே என்று,

மறு முனை
தயாராகிறது நட்பு
நான் புரிந்து கொள்கிறேன்
நட்பு இதுவென்று ,

படிப்பு முடிக்க தனியே
 தொலைவே சென்றிருக்கும்
 நண்பனை வாழ்த்திக்கொண்டு
கத்திருக்றேன் .

மீண்டும்
நண்பா என்றழைக்க !!

இங்ஙனம் ,
இவள் ,
"காரணம் சொல்ல
தெரிய தவிக்கும் பேச மடந்தை"
உன் நண்பி .

2 comments:

Popular Posts