Friday, April 27, 2012





 Todaa tondatain . . tonta bentain . .

  Have a look on this VDOzzz

 
He is not an actor, he is not a politician, he is not a cricketer.
He never appeared in Television nor he is talented like many others.
But he got one big unique talent. Yes!! With his humorous speech and
timing comedy, he could make millions go ROFL. Even a phlegmatic person would Laugh Out Loud after listening to his TAKE IT EASY-CROSSTALK show in 92.7 Big FM






இரண்டு வீடு  தள்ளி இருக்கும் ஒருவரை தொடர்புகொள்ள "தொலை"பேசிச் சேவை...... :P :D இவ்வாறு உள்ளது நம் தகவல் தொடர்பாடல் வளர்ச்சி

He sAiD iT :)




copyrights@n@rmiPhotography



✔ ✔ கண்டனம்- இறைவனுக்கு ✔ ✔





வாழ்வில் ஒன்றுசேர - விதி
இல்லையென்று நன்கு தெரிந்திருந்தும்
எதற்காக இடைநடுவே ஒரு உறவு  ;
எதற்காக இந்த ஏக்கம் ;
இறுதியில் எமக்கு  குற்ற உணர்ச்சி ;
ஏன் ??

இவற்றில் இருந்து
கரை சேர எம் மனம் படும் பாடு 
நீ அறியாயோ ??
படைத்த இறைவா - உனக்கு
என் மீது  இறக்கம் இல்லையோ ??
copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

Thursday, April 26, 2012

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography





copyrights@n@rmiPhotography

நண்பனிற்கும்  - நண்பிக்கும்

இடையிலான

✔ ✔ நட்பு ✔ ✔



மகிழ்கிறது மனம் நண்பனின்
"கவிதை blog" இல் எனக்கே
எனக்கென இன்று - ஓர்
 கவிதையை கண்டதும்.

ஆனால் எச்சரிக்கை !
பிறந்த கவிதை  நம் நட்பின்
 பெருமையை பறை சாற்றுவதாக இல்லை.

நம் நட்பிற்கும் எல்லை உண்டோ
என  வினவும் வேளையில்
இனி(மேல்) ஒரு நட்பில்லை
என்றுக்  கூறி சென்று விட்டான்.

நாம் போட்ட சண்டைகளில்
பெரிய சண்டையான - இந்த
நீண்ட நாள் இடைவெளி
நம் நட்பையே இழந்து (இறந்து)
விட்டதாக எண்ண வைத்தது போலும்.

என் முதற் கவிதை பிறக்க
காரணமாய் இருந்த அந்தத்
தாய் கவிதைகளை எங்கனம்
பிடிக்காமற் போகும் ??

பற்பல தடைகளிலும்
விட்டுபோகாமல் இத்தனை
 காலமாய் பயணிக்கும்
அவனுடனான நட்பு எங்கனம்
பிடிக்காமற் போகும் ??

எல்லா வேலைகளிலும் நண்பியாய்
இருக்க விரும்பியவள்
ஓரிரு இடங்களில் தவறியதால்
"நண்பி" என்ற பட்டத்தை
இழந்துவிடலாமா ?? (குமோ )??

ஒரு முனை
தவிக்கிறது நட்பு
நட்பாலும் எனை புரிந்து கொள்ள
முடியவில்லையே என்று,

மறு முனை
தயாராகிறது நட்பு
நான் புரிந்து கொள்கிறேன்
நட்பு இதுவென்று ,

படிப்பு முடிக்க தனியே
 தொலைவே சென்றிருக்கும்
 நண்பனை வாழ்த்திக்கொண்டு
கத்திருக்றேன் .

மீண்டும்
நண்பா என்றழைக்க !!

இங்ஙனம் ,
இவள் ,
"காரணம் சொல்ல
தெரிய தவிக்கும் பேச மடந்தை"
உன் நண்பி .
copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography    

copyrights@n@rmiPhotography

✔ ✔ பௌர்ணமி ✔ ✔ 

 

நிலவே ;
மாதம் ஒருமுறை  - முழு
வெண்ணிற ஆடையணிந்து 
இருள் வானில் - என்
படுக்கையறை ஜன்னல் ஓரமாக
எட்டி  பார்கிறாயே....
சங்கதி என்னவோ ???
copyrights@n@rmiPhotography


✔ ✔ இதயக் குமுறல் ✔ ✔

ஒருபுறம் பாசம் இல்லது வேதனை
மறுபுறம் அதீத பாசம் இருப்பது சோதனை

எனக்கென எழுதிய கணக்கு புரியாமல்
போர்களத்தில் நான் - போட்டி
என் வலது கண்ணுக்கும்,
என் இடது கண்ணுக்கும்

வலது வீழ்ந்தால் இடது மகிழ்ச்சி
இடது வீழ்ந்தால் வலது மகிழ்ச்சி
எது வீழ்ந்தாலும் ; நிச்சயம்
குருடகப் போவது இவள் தானே ???

என்னுள் உயரத்தே இருபவர்களின்
தரசு தட்டில் என் பாசம் நிறை இழந்து விட்டதாம்
எங்கனம்??  -   என்னவென்று
கூறுவது என் வேதனையை

என் சிறுபிள்ளைத் தனத்திற்கான
பரிசு தான் இதுவோ ??
எதுவாக இருபினும் - ஏற்றுகொள்ள
வேண்டிய கட்டாயத்தில் இவள் !

இறுதியாக ,
இவ்வுலகை எனக்கு காட்டி - என்னை
வழிநடத்தும் உங்களை ;
என் இதயம் அழும் போது - கவலைப்
படும் உங்களை ;
இதுவரை போட்டதில்லை எடை !!

போட்டாலும்...; இந்த தங்கை தராசில்
ஒருவருக்கு நிகர் மற்றொருவர் !!
அன்றும் இன்றும் என்றும்
இவள் உன் தங்கை !!!

முற்றும்.
copyrights@n@rmiPhotography


✔ ✔ என் இனிய நாட்குறிப்பே ✔ ✔


உன்னிடத்தில் சனி , ஞாயிறு
பதிவிற்கு மட்டும் என்
வெறும் மூன்று வரிகள் ?

வார இறுதி நாள் ;
ஓய்வு நாள் அதனால்
பதிவுகள் குறைவு -என 
எண்ணினாயோ ??

அட முட்டாள் நாட்குறிப்பே ;
பகிர்ந்து கொள்ளும் உனக்கே

தெரியாத  -என் கவலைகள் ,
எண்ணங்கள் , ஏக்கங்கள் ????????

எழுத ஆரம்பித்தால் வரிகள்

ஓராயிரம்.... என்று
 
 
 
copyrights@n@rmiPhotography
 
✔ ✔ நப்பாசை✔ ✔
விக்கல், தும்மல், காதல்
இவை மூன்றும் வந்தால்
அடக்கலாகாதாம் ....


 ஆனால் ..!
பெண்ணாக பிறந்த- நான்
பிறரை பாதிக்கும் என்று தும்மலையும் ,
பெற்றோரை பாதிக்கும் என்றும்
காதலையும் அடக்கி ,
தனிமையில் விடுவிக்கிறேன் ..


விக்கலை??
தடுக்கவில்லை
அக்கணமாவது அவன்
எனை என்னட்டும்
copyrights@n@rmiPhotography


✔ ✔ மறந்து விட்டதோ ✔ ✔

எதாவது எழுதிவிட
ஏங்குகிறது மனம் ;
பேனா எடுத்த கைகளோ
வெறும் கிறுக்கல் கோலமிடுகின்றன.
ஒருவேளை எழுத எழுத்துகள்
மறந்து விட்டதோ ??
ஆம் !!!
இதயம் முழுதும்
நீ குடிகொண்டு இருப்பதனால் !!

Popular Posts