Wednesday, November 7, 2012

இப்படியும் ஒரு கிராமமா?

 நம்பவே முடியல்ல ....

அருமை 

 

 

Thursday, October 18, 2012

இதென்ன இம்புட்டு கஷ்டமா இருக்கு  ??

 சப்பா ......என்ன ஒரு வில்லதனம் Saturday, October 6, 2012

சாதிக்கனும் னு நினைச்சிட்ட போதும்க ... ஆயிரம் வழி உண்டு 

 

 

 

சூபர் பாட்டி..... கலக்கிடீங்க !!!! அயராத உழைப்புக்கும், சாதனை படைப்பதற்கும் வயது ஒரு தடை இல்லை என்பார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக இங்கிலாந்து நாட்டில் ஒயிட் கிரிட் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் ஜாய் புஹ் என்ற 81 வயது முதியவர் விளங்குகிறார்.
கடந்த 1971ம் ஆண்டில் இவர் தனது 40 வயதில் சைக்கிளில் சென்று வீடு வீடாக பத்திரிகை போடும் தொழிலை தொடங்கினார். அதில் ஓய்வின்றி இன்றும் நீடிக்கிறார்.
இவரை உலக சாதனைப் பட்டியலில் கின்னஸ் நிறுவனம் இணைத்துக் கொண்டுள்ளது. இவருக்கு 8 பேரக்குழுந்தைகளும், 4 கொள்ளு பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள்.
மேலும் இவர் இந்தப் பணியிலிருந்து ஒரு நாள் கூட ஓய்வு எடுக்கவிலை என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மொழியை  நாங்களே வளர்ப்போம் ... வாங்கப்பா... 


 

Monday, September 24, 2012

✔ ✔ முதன் முதலாக ...✔ ✔

திடீரென ஓர் கை
என்னை தடுத்து
நிறுத்த காண்கிறேன்
அவன் முகம் -ஓர்
இனம் புரியாத நிழலில்.

ஆசைப்பட்ட சிறு சிறு அம்சங்கள்
அனைத்தும் ஒன்றினைந்ததாக
காண்கிறேன் - அவன் உருவம்.

என்னோடு  புன்னகைத்த படி
அதுவும் என்னருகில்...
பேச வார்த்தைகள் இன்றி
சிறகடித்து பறக்கிறது இளமனம் .

பல நாள் பழகியவன் போல்- அவனும் .
அவனை நன்கு அறிந்தவளாக -நானும்.

செல்கிறோம்.. சென்றுகொண்டு  இருக்கிறோம்.
ஓர் நீண்ட பயணம்.

பயணத்தின் நடுவே ஓர் திடீர் பிரிவு.
திடுக்கிட்டது நெஞ்சம் - கூடவே
விழித்து கொண்டன கண்கள்.
 நேரம் நள்ளிரவு 2 மணி !!!

கண்டதெல்லாம் வெறும் கனாவென
கைகொட்டி சிரித்தது நிஜம் !

மனமோ சோகத்தின் உச்சியில்
வேண்டுகிறது இறைவனிடம்.
இனிவரும் இரவுகளிலும் கண்
மூடியதும் தந்துவிடு
என்னவனுடனான  நடைபயணத்தை.


Wednesday, September 12, 2012

!!வைரமுத்துவின் தனக்கு தானே கொள்ளி வைக்கும் சிகரெட் பிரியர்கள்!!


சுகமா சுந்தரம்
மதுரையில் மழையா
எந்த மழை பெய்தென்ன
உன் அக்கினி
விரல் மட்டும்
அணையாதே??

அது சரி.. இந்த
சிகரெட் மங்கைக்கு
எந்த வயதில் நீ
தாலி கட்டினாய் ??

கை பிடித்த
நாள் தொட்டுக்
கைவிட மறுக்கிறாயே !

வேண்டாம்
புகை பிடிப்பதைப்
பொசுக்கி விடு !

கை கழுவினாலும்
போகாதிருக்க
அது ஒன்றும்
கைரேகையன்று !

வாழ்க்கை உன்னை
மாலை கட்டி
வரவேற்கும் போது
நீ ஏன் நிக்கோடினோடு
நிக்காஹ் செய்கிறாய் ?

ஜாக்கிரதை
புகை உனக்குள்
புற்று கட்டும்!

காற்றை நிறுத்தி விட்டுப்
புகையை மட்டும்
சுவாசிப்பவனே ..

உனக்கு நீயே
கொஞ்சம் கொஞ்சமாய்
ஏன் கொள்ளி
வைத்து கொள்கிறாய் ??

சிகரெட் பேட்டியின்
உள்ளட்டை
வெள்ளையாய் இருகிறதே
அது யாரோ
ஒருத்தியின்
விதவை நிறமல்லவா?


சிகரெட் என்பது
பற்ற  வைக்கும் ஒரு
தொற்று நோய் !

நிறுத்தி விடு
இல்லையேல்
உன் நுரையீரல்கள்
கறுப்புத் தாமரைகளாய்க்
கருகி விடும்!

Friday, July 6, 2012

கவலையை விடுங்கள்!


சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டி...யோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....

பித்தவெடிப்பு மறைய


காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு


பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு


தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்


கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு


தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய


மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க


வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற


ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க


தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய


எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க


அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்


அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக


சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

Friday, June 8, 2012


எங்களின் காலன் கறி


அந்தி சாயும் நேரம் என்  அருமை மூத்த சகோதரனுக்கு காலன்  கறி (mushroom curry  ) வைக்கும்  ஆசை உதயமாகவே ,
அண்ணனுக்கு உதவியை நானும் பின்தொடர்ந்தேன் சமையலறை நோக்கி . நாங்கள் இருவருமே சமையல் கலைக்கு
 பழக்க பட்டவர்கள் இல்லை என்பதுனாலேயோ என்னவோ அம்மாவுக்கு சிரிப்பாக  இருந்ததது எங்கள் புது முயற்சியை
பார்க்கும் போது , கூடவே fridge இருந்த முஷ்ரூம் முழுவதையும் உபயோகிக்கும் வாய்ப்பும்  இல்லாமல் போனது  !

இருவருக்குமே அனைத்தும் புதிது இருந்தாலும் சாதித்து காட்டுவது என்றாகி விட்டது ......
தொடங்கினோம்   எங்கள் கச்சேரியை  ......
காலனை (Mushroom) சுத்தம்  செய்து   வெட்டுவது அண்ணனின் பொறுப்பு ....
காலனை (Mushroom) எண்ணையில் இட்டு பொறித்து (பஜ்ஜி போல ) எடுப்பது என் பொறுப்பு ...
பொரித்ததும் அதில் sauce (உணவுடன் சேர்த்து உண்ணப்படும் ) இட்டு கூடவே சுவைக்காக சேர்க்க படும் அனைத்தையும் இட்டு ஒரு சுவையான கறி-யாக மாற்ற வேண்டும் இதுவே குறிக்கோள் ......
திட்டம் இட்ட போலவே அனைத்தும் இடம் பெற்றது எமது காலன் கறி யும் உருவானது 

சுவையிலும் குறை இருக்க வில்லை .....
SO over-all ..... எங்களோட task la 65 % பாஸ் பண்ணியாச்சு

இதோ எங்கள் காலன் கறி உங்கள் பார்வைக்காக

Friday, June 1, 2012

உணரும்  வரை  உண்மையும்  ஒரு  பொய்  தான்
புரிகின்ற வரை  வாழ்கையும்  ஒரு  புதிர்  தான்

Tuesday, May 29, 2012

உதைத்த காலுக்கு கொலுசும், முத்தமும்தானே சிறந்த பரிசு!


ஒரு நாள் காலை ராஜசபை வழக்கம்போல் கூடியது. அக்பர் சபையோர்களை பார்த்து கேட்டார். "நேற்று நள்ளிரவில் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. யாரோ ஒருவன் என் படுக்கையில் ஏறி, எனது மார்பில் எட்டி உதைத்து எழுப்பினான். யாரென்று பார்ப்பதற்குள் ஓடிவிட்டான். அவனை கண்டுபிடித்தால் என்ன தண்டனை கொடுக்கலாம்?''

இதைக் கேட்ட சபையோரின் ரத்தம் கொதித்தது. ஒவ்வொருவரும் எழுந்து கடும் தண்டனைகளை தெரிவித்தார்கள். எல்லாமே மரண தண்டனையில்தான் முடிந்தது.

பீர்பால் மட்டும் சிந்தனையில் மூழ்கி இருந்தார். அக்பர் அவரை நோக்கி "பீர்பால், நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே, உங்கள் கருத்து என்ன?'' என்றார்.

பீர்பால் சொன்னார், "சர்க்கரவர்த்தி அவர்களே உங்களை உதைத்த காலுக்கு தங்கம், வைடூரிய கொலுசு செய்து போட்டு முத்தமழை பொழியுங்கள்.''

"என்ன கொலுசும், முத்தமுமா?'' என்று சபையே திகைப்புடன் பார்த்தது.

"ஏன் அப்படி சொல்கிறீர்கள்?'' அக்பர் கேட்டார்.

"மன்னா, தங்கள் படுக்கை அறையில் இவ்வளவு கட்டுக்காவல்களை மீறி நள்ளிரவில் நுழைவது என்றால் யாரால் முடியும்? அதுவும் உங்கள் மார்பில் ஏறி உதைத்துவிட்டு ஓட வேண்டும் என்றால், அது நமது குழந்தை இளவரசனால்தானே முடியும். அவருக்கு கொலுசும், முத்தமும்தானே சிறந்த பரிசு!'' என்று விளக்கினார் பீர்பால்.

அவரது மதியூகத்துக்கு அவை தலைசாய்த்தது.

Monday, May 21, 2012

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.  
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது.

பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! அதாவது "கிரீஸ்", அல்லது "ரோமன்" காலத்தில் இவர்கள் யாரோ இதை கட்டி இருக்கிறார்கள் என்று தவறாக எழுதிவிட்டார் .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது.
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.


 கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!


 -- நன்றி

 

Srink Photography


பாண்டியர்களின் கலை வண்ணத்தில் பிரம்மாண்டமான குளத்திற்கு நடுவே அழகான தீவு போன்ற அமைப்புடனான இடத்தில்..!

தரையிலிருந்து சுமார் 100 முதல் 135 அடி உயரத்தில் இருந்து எடுத்தது..!

இடம் : காளையார் கோயில் ,சிவகங்கை மாவட்டம்.
படம் : Srink Photographyஉதவி பண்ணுவோம?


வைகாசி வந்ததுமே சூரிய பகவானுக்கு என்ன கோவமோ ??
45 degree  வரைக்கும் சூரியனின் அட்டகாசம் இருக்குமாம்
எரித்து தள்ளுகிறது வெப்பம் .... எல்லா வீட்டு மின்விசிரிக்கும் கடும் உழைப்பு ...... சில நேரம்  fridge குள்ளேயே போய் இருந்துடலாம் போல இருக்கு .... தாங்க முடியா அவிச்சலில்
எல்லாரும்  இபோதெல்லாம்   கடலை தேடி ஓடுகின்றனர்  காற்றடுவதற்காகவும் , அலையில் ஆடி குளிர்ச்சி பெறுவதற்கும் !

copyrights@n@rmiPhotography


எங்களுக்கே இப்படி னா.... இந்த மிருகங்கள் ... பறவைகளுக்கு எப்படி  இருக்கும் ??
நினைக்கும் போதே கவலைய தான் இருக்கு .... பாவம் ல....

நமக்கு முடிஞ்சது ஒரு பத்திரம் நிறைய தண்ணி புடிச்சி வீட்டுக்கு வெளில  வைப்போம்.
அவங்களுக்கும் வந்து குளிர்ச்சி அடைந்து கொல்லுவாங்க ல

Wednesday, May 16, 2012

These type of cute hearts make our Mints , hrs , days r Wonderful know?

copyrights@n@rmiPhotography
copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

 


Cutie :D 1yr old ... 
i don't even knw her name ! 
incidentally met.. On the way to my friend's home ! she was crying sitting at her home ... 
was chooo chweeet to watching her ;) 
(but luvly knw
ava azhugaiya paakum pothu semmma cute... appudiye
photo edukalam nu camera eduthena .... odane alugaii ninnuduchi !!
)
Took out my cam to click her ! but , what a surprise seeing at my cam she started giving pose to me even forgetting her CRY :D 
After shooting, Cutie mam started calling her mom to See her self on CAM display !! 
( also she gave a cute sound + expression seeing herself on CAM display !! ) 
that was really fantastic !!! (couldn't able to click that :-/ bcoz cam was with our little mam:)) 


VJ tv - Neeya Naana


கண்ணதாசன் ஊரிலிருந்து ஓர் வைரமுத்து
 ரொம்ப இயல்பான பொண்ணு :-))))

click here to watch the VIDEO 

 காதலித்து பார்


வைரமுத்துவின் "காதலித்து பார்" 
(Click the link for the KAVITHAI)

 உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்
இராத்திரியின் நீளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்
காதலித்து பார்

மகிழ்ச்சி!

 

மேடையெறிய கவிதை மகிழ்ச்சி!
கவிதைக்குள் தமிழ் மகிழ்ச்சி!
தமிழுக்குள் வார்த்தை மகிழ்ச்சி!
வார்த்தைக்குள் அர்த்தம் மகிழ்ச்சி!
அர்த்தம் தரும் உண்மை ம்கிழ்ச்சி!
உண்மை தந்த உணர்வு ம்கிழ்ச்சி!
உணர்வில் வாழ்ந்த உள்ளங்கள் மகிழ்ச்சி!
மகிழ வைத்த உள்ளத்திற்கு மகிழ்ச்சி!
-GITHEEN

Vairamuthu Kavi Arangam - Magizhtchi 
(Click the link for the KAVITHAI)

Tuesday, May 15, 2012


வைரமுத்து sir-ன் "தாய்க்கான கவிதையுடன்"


வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்தது இல்ல ...
வயிற்றில் நீ சுமந்த ஒன்று வைரமுத்து ஆயிருச்சு ...


ஆயிரம் தான் கவிதை சொன்னேன் 
 (Click the link for the KAVITHAI)


✔ ✔தமிழரசி✔ ✔

copyrights@n@rmiPhotography

ஆறுமாத பச்சிளங்
குழந்தை- அவள்
நள்ளிரவு நேரத்தில்
பெற்றவர்களால் கைவிடப்பட்டவள் 

பெற்றோர் அன்பை எண்ணி
துன்பம் அடைவாளா?- இல்லை ;
ஊரார் அரவணைப்பை எண்ணி
இன்பம் அடைவாளா??

பெற்றோருடன் வாழ்ந்தால்
ஓர் வீட்டுப்பிள்ளை - இப்போது
ஊருக்கே பிள்ளை அவள் !
ஆம்!
அவள் பெயர் அரசி .... தமிழரசி !!

இறைவன் ஆசி பெற்றவள் !!!

 படித்ததில்   பிடித்த   கவிதை 


கடலில்  இருக்கும்  முத்துகள்
போல  பத்திரமாக  உள்ளது...... 
அவள்  கொடுத்த  முத்தங்கள் ., எல்லோருக்கும்
புன்னகையோடு  பரிசுகள்  கொடுத்தாய்
எனக்கு  மட்டும்  புன்னகையே  பரிசாக  கொடுத்தாள்
அவள்  வேறு  யாரும்  அல்ல என்  அம்மா ...


Monday, May 14, 2012

உலகமே அன்னையரை போற்றிக்கொண்டு இருக்கும் இந்த மாதத்தில் , என் blog இலும் என் தாய் / தாய்மார்கள் பற்றி சிறிய பதிவு !


எனோட வாழ்க்கை-ல அம்மா-ங்கற கதாபத்திரம் ரொம்பவே முக்கியமானது (எல்லாருக்குமே அப்டி தான் ஆனாலும் நர்மி-கு இன்னும் special )
என்-ன்னு சொல்லுறேன் நீங்களே தெரிஞ்சுகோங்க ...

என் அம்மாமா - என்  முதல் தாய்
.நான் பிறந்தது என் தாய் வயிற்றில் என்றாலும் வளர்ந்தது என் தாயிற்கும் தாய்-யான எனோட அம்மாமா -வுடன்
எனக்கும் தாய் என் அம்மாவிற்கும் தாய் .. (இந்த விடயத்தில நான் ரொம்பவே குடுத்து வச்சவ ன்னு தான் சொல்லணும் ) 
நல்லது, கேட்டது, இன்னது இப்படி ,இன்னது அப்படி ன்னு  .... மேலும் தேவரத்தில இருந்து திருவாசகம் வரையிலும் ... ஆத்திசூடி ல இருந்து   திருக்குறள்  போன்ற ..
அவங்களுக்கு தெரிஞ்ச எல்லாமே சொல்லி குடுத்து இருகாங்க .... மாலை 6 மணிக்கு மேல மூணு பெரும் அம்மாமா சொல்லி கொடுத்த-வற்றில் எங்களுக்கு நினைவு
இருக்கிற எல்லாத்தையுமே மூன்று பெரும் போட்டி போட்டு கொண்டு அம்மா , அம்மம்மா முன்னாடி எல்லாத்தையும் ஒப்புவிப்போம் ...
பாராட்டும் வாங்குவோம் !! (சிலநேரம் பரிசுகளும் உண்டு ;) )எனோட 12 வயசு வரைக்கும் நான் வாழ்ந்தது முற்றிலும் ஒரு அரண்மனை-னே
சொல்லணும் :)  . பொருள் , பண்ட ஆடம்பரத்தில்  இல்லைனாலும் எனோட அம்மாவோட & அம்மமாவோட பாசத்துல நானும் என் அண்ணன்களும் மூழ்கி போய் இருந்தோம் ...
2005 எங்களுக்கு பெரும் அதிர்ச்சி .... எனோட அம்மமாவோட பிரிவு ... எங்க நாலு பேருக்கும் தனிமை :( .. ஒரு மூன்று மாதம் எப்டி போனதுனே  தெரியாது.... 


என் ராணிமா - எங்கள் உயிர்
எனோட வாழ்க்கைல கிடைச்ச மிகப்....பெ..ரி...ய...... (என்னனு சொல்லலாம் ?? ) valuable precious Supppppperrrbbb GIFT  :)
சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லைங்க ..... அவ்வளவு powerful -lady  எனோட அம்மா....  (இல்லாமய பின்ன? எனோட அம்மமாவோட வளர்ப்பு ஆச்சே )
அவங்களோட நிதானம் ,அவங்களோட பக்குவம் ,அவங்களோட thinkings  யாருக்குங்க வரும் ?? (கண்டிப்பா எனக்கு எட்டா கனி தான் )
அடடா மறந்துட்டேனே எனோட அம்மாவோட அழகு??? என்கிட்ட வந்து யார் ரொம்ப அழகுன்னு கேட்டா .... என் பதில்  "அம்மா " :) மட்டும் தான் .
(அம்மான்னா  எனோட அம்மா மட்டும் இல்ல எல்லா அம்மாவுமே தான்  )  எனோட best friend ... எனோட லவர்..  எனோட enemy .. எனோட team -mate  ..
எனோட teacher ..  இப்படி எல்லாமே அவங்க தான் எனோட ராணி அம்மா :) ....... எனக்கு மட்டும் இல்லாம எனோட school time - classmates கும் ரொம்ப
புடிச்ச அம்மாவா இருந்து இருகாங்க ... !! இன்னொன்னு கண்டிப்பா சொல்லணும்க  எனோட அம்மா எனக்கு அம்மா மட்டும் இல்ல ஒரு குழந்தையும் கூட  :) .
ஒரு சின்ன விபத்துல அம்மா மருத்துவ நிலையத்துல  ஒரு மாதம் இருந்தப்போ அம்மாவ கவனிசிக வேண்டிய பொறுப்பு (பாக்கியம் )
எங்க மூணுபேருக்கும் கிடைச்சது.. மூன்று கிழமை படுக்கையிலேயே இருந்த அவங்க முதல் அடி எடுத்து வச்சி நடந்தப்போ ஏற்பட்ட சந்தோசம் இருக்கே .....
பிறந்த குழந்தை முதல் அடி எடுத்து வச்சா  போல .....  அன்னில இருந்து அவங்க எங்க குழந்தையும் கூட  ..... (இன்று வரை ... இனிமேலும் ) .
copyrights@n@rmiPhotography


எனோட அண்ணன்க - அவங்களும் எனக்கு ஓர் தாய்
ரொம்ப சொல்லுறதுக்கு விரும்பலைங்க ......... ஒவ்வொரு அண்ணனும் எனக்கு ஓர் தாய் தான் :)
எனோட suppperrb  பிரசாத் அண்ணா  ... cute பிரதீப் அண்ணா ... grate சிவா அண்ணா .. wonderful அருண் அண்ணா .. lovely கார்த்திக் அண்ணா ...very calm குரு அண்ணா இவங்க தாங்க ... பாசத்துல அண்ணனுக்கு அண்ணனுமாய் தாய் கு தாயுமாய் இருக்றவங்க

எனோட மலிகா அம்மா .. மேகலா அம்மா ... சந்திரா அம்மா ...
இந்த தாய் பாசம் கிடைக்கிறதுக்கு ரொம்ப குடுத்து வச்சி இருக்கேன் ன்னு தான் சொல்லணும் (என்ன தவம் செய்தனை .... யசோதா  :D )
இவங்களோட நான் உறவாடுவது phone  - ல தாங்க :-/  (அது தான் ஒரு குறை )
மட்டற்ற படி ... இவங்களோட பெற மகளா இருக்கிறது சந்தோசதிளையும் சந்தோசம் தான்-க !! ராணிமா.. மல்லிமா.. மேகலாமா ..சந்திராமா..
 ஒருத்தருக்கு ஒருத்தர எடைபோடவே முடியாது பாசம் ங்கற  தரசு தட்டுல ......ஒவ்வொரு முறையும் அவங்களுக்கு phone பண்ணதும்
 "ஆ சொல்லுப்ப எப்டி இருக்க ன்னு "கேட்கும் பொது கிடைகிற சந்தோசம் தனி தாங்க :) ஒவ்வொருத்தரும் அனுபவிக்க வேண்டிய ஒரு சந்தோசம் ....
வேண்டிகொள்கிறேன் இறைவனை ... மத்தவங்களுக்கும் கிடைக்கணும் ....இது போன்ற பாச மழைல நனைகிற வைப்பு கிடைக்க வேண்டும் என்று ....

இப்போ தெரியுதாங்க எனோட வாழ்க்கைல  அம்மா-கள் கதாபத்திரம்  பற்றி 


வாழ்த்து சொல்ல வயது இல்லை என்றாலும் ...
நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன் .... உங்க அனைவருக்கும் :)
நீங்க இல்லேன்னா சந்தோசத தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டு  இருக்கும் இந்த நர்மி-கு  ...

வாழ்க்கைல ரொம்ப முக்கியமான .. பாசம் அன்பு சந்தோசம் இப்டி  எல்லாத்தையுமே கொடுத்த உங்களுக்கு
இந்த நர்மி யோட மிகப் பெரிய நன்றி :)


luvvvvvvvv uuuuu alllll muchhhh and mooooosttttttt 


Saturday, May 12, 2012


மதுமதிஎன் இனிய  வாழ்வில்  "" நூலை போல் சேலை ; தாயை போல் பிள்ளை "" என்பது ..... பல விடயங்களில்  ஒத்துபோய் இருப்பினும் ,
இந்த வாசிப்பு பழக்கத்தில் அக்கூற்று (100%)  நான் கண்ட  உண்மை ... !
எனது அம்மமாவை போல் அம்மாவும் , அம்மாவை போல் நானும் !! (சொன்ன பழமொழி correct தானேங்க? )
தாய் வீடு சீதனமாய் எனக்கு கிடைத்த இந்த வாசிப்பு பழக்கம் அருமையிலும் அருமை என்றே கூற வேண்டும்.

வாசிப்பு தான் என்னுடைய முக்கியமான பொழுது போக்கு..
அதிலும் ரமணிச்சந்திரன் கதை  என்றால் தண்ணீர், சாப்பாடும் தேவையில்லை..
வீட்டுக்கு வந்து ஒரே மூச்சாக வாசித்து முடித்து விட்டு தான் மறுவேலை .

தொடக்கம் முதல் இறுதி வரை கதை சுவாரசியத்தில் குறையே  இருக்காது ...
முதல் இரு வரிகளிலேயே கண்முன்னே திரை போட்டபோல் தொடரும் கதை ...(சினிமா போலவே )
நடைமுறை வாழ்கையின் வாசம் குறையாமல் செல்லும் கதை .

அதிலும் பெண் இனம் பற்றிய அவர் பார்வை பாராட்ட தக்கது .
பாரதி கண்ட புதுமை பெண்
படைப்பது அவருக்கு கைவந்த கலை ...
நான் recent-a வாங்கின  பானுமதி ,
மதுமதி, இது ஊர் உதயம் போன்ற புத்தகங்களே சாட்சி.
copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography


அவர் எழுதும் அனைத்திற்கும் ரசிகையான என்னை மேலும் கவர்ந்தது இந்த ""மதுமதி"" !
copyrights@n@rmiPhotography

தந்தை வளர்ப்பில் வளர்கிற இவளுக்கு தையிரியம் அதிகம் .
இந்த நூற்றாண்டில் எப்படி வழவேண்டுமோ அதற்கான எடுத்து காட்டாக பிறந்த பாத்திரம் அவள்.
தந்தை கலந்து கொண்ட கார் race ல்  திடீரென ஏற்பட்ட விபத்திற்கு எந்த தப்பும் பண்ணாத தந்தை காரணமாகவே ,
விபத்தில் பாதிக்க பட்டவரான (கண்ணை இழந்த) இளம்  தொழில் அதிபரின்
(சற்று முரட்டு ) assistant   ஆகா சேர்ந்து அவருக்கு தந்தையின் பக்கத்தை எடுத்துகூறி
அவரை விளக்கவைப்பதே  நோக்கமாக இருக்கிறது கதை, கதையின் சுவாரசியம் குன்றாமல் இருக்க
இனிய காதலும் மலர்கிறது முரட்டு இளம்  தொழில் அதிபருக்கும் கதையில் heroine -கும்  (அதாங்க எனோட ப்ரிய மதுமதி  )   .
இதுவரை 8  தடவை வாசித்து ஆகி  விட்டது... சுவை குன்றாத ரமணிச்சந்திரனின் வரிகளினாலும்  கதையின் சுவரச்யதினாலும்  !!

விட்ட நானே கதைய சொல்லி முடிச்சிடுவேன் போல ....
நான் சொன்னா  கதை ; கதை மாதரியே இருக்காதே ...
நீங்களே வாசிச்சு பாருங்களேன் ... நான் சொல்லறது உண்மைய இல்லையானு தெரிஞ்சுடும் la

Wednesday, May 9, 2012

 Vesak celebration


Vesak is considered as both a religious and cultural festival in Sri Lanka. It is celebrated on the day of the full moon in May. Vesak Day is one of the biggest days of the year in the Buddhist calendar and is celebrated by Buddhists all over the world. Buddhists commemorate the important events that took place in the life of Lord Buddha on this Vesak Full Moon Poya Day. First comes the birth of Siddhartha Gautama in Lumbini in Nepal which took place under the arbor of Sat trees where queen Mahamaya gave birth to him. The second event was Siddharta Gautam's supreme attainment as the Buddha, the Enlightened One. The third event was Lord Buddha's Parinibbana over 2600 years ago at Kusinagar.

Apart from Sri Lanka, many Asian countries including India, Japan, Singapore, Taiwan, Indonesia and Nepal celebrate Vesak. Many religious activities are organized during this period in Sri Lanka such as Sil campaigns, Bodhi Poojas, Dansalas (Freely giving foods, coffee, tea from people), Vesak devotional songs (Bakthi Gee), pandols (thoran) and lanterns. 
copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography


copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography
 
 
உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்.

--சுவாமி விவேகானந்தா

Tuesday, May 8, 2012

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography
copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

copyrights@n@rmiPhotography

Popular Posts